1

Tamizh – One minute story #1


என்னா நக்கலு – ஒரு நிமிட கதை
என் நண்பன் சக்தி BSC (Electronics) படிச்சு முடிச்சிட்டு வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு நாள் திடீர்னு NOKIA கம்பெனில இருந்து இண்டர்வீயுக்கு அழைப்பு வந்துது. சக்திக்கு பயங்கர சந்தோசம். அடுத்த நாளே இண்டர்வீயுக்கு வர சொன்னாங்க. மறுநாள் காலைல சக்தி அதிசயமா சீக்கரம் எழுந்திரிச்சு நல்ல தோச்சு இஸ்திரி பண்ணின டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான்.
கம்பெனிக்கு போனவுடனே 10 நிமிஷம் வெயிட் பண்ண சொன்னாங்க. 10 நிமிஷம் கழிச்சு இண்டர்வீயு ரூம்ல இருந்து அழைப்பு வரவே அவனும் உள்ளே போனான்.
சக்தி உள்ள நுழைஞ்சதும் அவனோட பைல் கொஞ்ச நேரம் புரட்டி பாத்துட்டு , வழக்கம் போல படிப்பு, குடும்ப பின்னணி, வேலை செய்த முன்னனுபவங்கள் போன்ற தகவல்கள் எல்லாத்தையும் கேட்டு அறிந்தார் HR. அவருக்கு சக்தியின் பதில்கள் கொஞ்சம் பிடித்து போகவே அடுத்த கேள்வி கேட்டார்.
”ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிப்பார்ட்மென்டுல வேலை பாக்கணும்ன்னு விருப்பம் இருக்கா?”
“எஸ் சார். முடிஞ்சா கம்பெனி CEO இல்லன்னா அட்லீஸ்ட் ஜெனரல் மேனேஜரா மேனேஜ்மென்ட்ல இருக்க விருப்பம்..”
இதை கேட்ட அந்த HR மேனேஜர்க்கு அதிர்ச்சியும் கோபமும் பொங்க…..
”உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?’ என்றார்..
சக்தி ஒரு நொடி யோசித்து விட்டு ..
”ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?”

அஷீதா

Filed in: Kathai, Tamizh

One Response to "Tamizh – One minute story #1"

  1. govind says:

    Mokka kathai………

Leave a Reply

Submit Comment

© 2477 Namma Area. All rights reserved. XHTML / CSS Valid.

Switch to our mobile site